2018-06-05 10:33:00

இமயமாகும் இளமை - கல்லறையில் விழும் காய்ந்த இலைகள்


'வாட்ஸ்ஸப்' வழியே வலம்வரும் ஒரு கருத்துப் பகிர்வு இது:

இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன், நாம், ‘பஸ்’, ‘டிரெயின்’ அல்லது, விமானத்தில் பயணம் செய்தபோது, பயணம் ஆரம்பமானதும், சுற்றியிருப்போரைப் பார்த்து சிரித்தோம்; அறிமுகங்கள் நிகழ்ந்தன; நாட்டு நிலவரம் அலசப்பட்டது; பயணத்தின் இறுதியில், ஒரு சிலர் நம் நண்பர்களாகவும் மாறினர்.

இப்போது நிகழும் பயணங்களில், நாம் அமர்ந்திருக்கும் இருக்கையைச் சுற்றி, ஒரு கல்லறை உருவாகிறது. ஒருவர் ஒருவரை எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்வது கிடையாது. அங்கு நிலவும் அமைதியில், அவரவர் வைத்திருக்கும் கைப்பேசி அல்லது மடிக்கணணியில் விரல்கள் உருவாக்கும் 'டிக், டிக்' ஓசைமட்டுமே கேட்கிறது. அது, அந்தக் கல்லறைத் தோட்டத்தில் விழும் காய்ந்த இலைகள் உருவாக்கும் ஒலிபோல் கேட்கிறது. அங்கிருப்போர் அனைவரும், உலகின் பல மூலைகளில் இருப்போருடன் தொடர்பு வைத்திருப்பர். ஆனால், அருகில் அமர்ந்திருப்பவருடன் அல்ல.

எத்தனைத் தொடர்புகள் என்ற எண்ணிக்கையைக் காட்டிலும், எத்தகையத் தொடர்புகள் என்ற உண்மையே, வாழ்வை மேம்படுத்தும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.