2018-06-04 16:43:00

Biagio Agnes பன்னாட்டு இதழியல் விருது பிரதிநிதிகள் சந்திப்பு


ஜூன்,04,2018. செய்தியாளர் பணியை சிறப்பாக ஆற்றியவர்களில் ஒருவரான, Biagio Agnes என்பவரின் போதனைகளைப் பின்பற்றி, Biagio Agnes பன்னாட்டு இதழியல் விருது அமைப்பினர், சமூகஊடகப் பணிகளில் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதை ஊக்குவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த அமைப்பின் பிரதிநிதிகள் எழுபது பேரை, இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்தில் வளர்ந்துவரும் நவீன சமூக ஊடகங்களை, சிறுவர் சிறுமியர் பயன்படுத்தும் முறைகள் குறித்த கவனம் அவசியம் என்பதை வலியுறுத்தினார். முன்னேறிவரும் தகவல் தொழில்நுட்பத்தின் மத்தியில், பொதுவில் கேட்கப்படாத குரல்கள் உள்ளன எனக் குறிப்பிட்ட திருத்தந்தை, புறநகர்ப் பகுதிகள், உண்மை, நம்பிக்கை ஆகிய மூன்று வார்த்தைகள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

நகரங்களுக்குத் தொலைவில் வாழும் மக்களின் கதைகள் மறக்கப்படக் கூடாது எனவும், செய்தியாளர், ஒரு நிகழ்வை தான் புரிந்துகொள்ளும் முறையில் எழுதுகிறார் எனவும், ஒரு தனிமனிதரையோ அல்லது ஒரு குழுவையோ புண்படுத்தாமலும், ஒரு நிகழ்வின் சட்டமுறையானதை அகற்றிவிடாமலும் இருப்பது அவசியம் எனவும் திருத்தந்தை கூறினார்.

செய்தியாளர், நம்பிக்கையளிப்பது என்பது, பிரச்சனைகளற்ற உலகம் பற்றிச் சொல்வது என்பதல்ல, மாறாக, தன் மனசாட்சிப்படி ஒரு நிகழ்வு பற்றி அறிவிப்பதோடு திருப்தியடையாமல், மக்களில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அழைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார், திருதந்தை.     

Biagio Agnes பன்னாட்டு இதழியல் விருது அமைப்பு, இத்தாலிய அரசுத்தலைவரை புரவலராகக் கொண்டு, Campania மாநில அதிகாரிகளின் துணையுடன் செயல்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.