2018-06-01 16:12:00

“உங்களிடமுள்ள சிறந்தவற்றை அளியுங்கள்” ஏடு


ஜூன்,01,2018. “உங்களிடமுள்ள சிறந்தவற்றை அளியுங்கள்” என்ற தலைப்பில், விளையாட்டு மற்றும் மனிதர் பற்றிய கிறிஸ்தவ கண்ணோட்டம் பற்றிச் சொல்லும், புதிய ஏடு ஒன்றை, திருப்பீட பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவை, இவ்வெள்ளிக்கிழமையன்று, செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது.

திருப்பீட பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவைத்  தலைவர் கர்தினால் Kevin Farrell அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியுடன் தொடங்கும் இந்த ஏடு, 48 பக்கங்களில் ஐந்து பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கின்ற சிறந்தவற்றை அளிக்க வேண்டியதன் நோக்கம், விளையாட்டின் பல்வேறு முகங்கள், மனிதருக்கு விளையாட்டின் முக்கியத்துவம், நற்செய்தி ஒளியில் முன்வைக்கப்படும் சவால்கள், விளையாட்டை ஊக்குவிப்பதில் திருஅவையின் பங்கு ஆகிய முக்கிய தலைப்புகளில் விரிவான கருத்துக்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டு வழியாக ஆற்றப்பட வேண்டிய மேய்ப்புப்பணி திட்டங்கள் பற்றி, இறுதிப் பகுதியில் விளக்கும் இந்த ஏடு, கல்வியில் விளையாட்டின் அழகு, மனித சமுதாயத்தின் சேவையில் விளையாட்டு, இதன் சுற்றுச்சூழல் கண்ணோட்டம் போன்றவற்றையும் விளக்கியுள்ளது.

கல்வியில் மாற்றம் கொண்டு வந்தால்மட்டுமே உலகை மாற்ற இயலும் என்ற திருத்தந்தையின் கூற்றையும் இந்த ஏடு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.