2018-05-31 15:38:00

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஆதரவான புதிய சட்டம்


மே,31,2018. சவுதி அரேபியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக பெண்களுக்கு ஆதரவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அவர்கள், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை, குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், மூன்று இலட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டுமென, கடந்த மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் அவை கேட்டுக்கொண்டது கவனிக்கத்தக்கது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.