2018-05-26 16:29:00

மனித வர்த்தகத்திற்கெதிராக இந்தோனேசிய அருள்சகோதரிகள்


மே,26,2018. இந்தோனேசியாவில் மனித வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில், கிழக்கு ஜகார்த்தாவில் கடந்த வாரத்தில் நடைபெற்ற ஒரு பயிற்சி பாசறையில், 19 அருள்சகோதரிகள், ஒரு முஸ்லிம் பெண் மற்றும் ஒரு கிறிஸ்தவ சபை போதகர் கலந்துகொண்டனர்.

மனித வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, சட்ட முறைப்படி என்னென்ன உதவிகள் வழங்கப்பட முடியும் என்பதை, சட்ட வல்லுனர்களும், தொழில்துறை வல்லுனர்களும், இப்பயிற்சி பாசறையில் விளக்கினர்.

இந்தோனேசியாவில் பல ஆண்டுகளாக, பல்வேறு துறவற சபைகளைச் சார்ந்த அருள்சகோதரிகள், மனித வர்த்தகத்திற்குப் பலியான மக்கள் மத்தியில் பணியாற்றி வருகின்றனர் எனவும், நீதிமன்ற விசாரணைகளில் உதவுவதற்குத் தகுதியுடைய  பயிற்சியாளர்கள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தோனேசியாவில் மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு அரசுத்தலைவர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, அந்நாட்டு மாணவர்கள் அண்மையில் வலியுறுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.