2018-05-25 16:00:00

இமயமாகும் இளமை ........: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு


இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 30 கிலோமீட்டர் தொலைவை 11 மணி 55 நிமிட நேரத்தில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் ராஜேஸ்வர பிரபு நீந்திச் சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கெனவே பாக் நீரிணைப் பகுதியில் இந்தியக் கடல் எல்லையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி இருந்தார். தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு நீந்துவதற்கு அரசிடம் அனுமதி கோரியிருந்தார். இலங்கை அரசின் அனுமதி கிடைத்ததையடுத்து, அதிகாலை 3 மணி 5 நிமிடத்துக்கு மன்னார் கடலில் இருந்து நீந்தத் தொடங்கினார். 30 கிலோமீட்டர் தொலைவை நீந்திக் கடந்து பிற்பகல் மூன்று மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்துசேர்ந்தார். 11 மணி 55 நிமிட நேரத்தில் 30 கிலோமீட்டர் தொலைவை நீந்திக் கடந்து சாதனை படைத்த அவரைப் பெற்றோர் கட்டித் தழுவி முத்தமிட்டு வரவேற்றனர். தனுஷ்கோடிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.