2018-05-24 16:45:00

மியான்மார் பல்சமயத் தலைவர்களின் கடிதம்


மே,24,2018. மியான்மார் நாட்டின் எதிர்காலம், அந்நாட்டில் வளமையான வரலாற்றையும் மரபுகளையும் கொண்ட பல்வேறு மத மற்றும் இனக் குழுக்களின் நல்லிணக்க வாழ்வைச்  சார்ந்து உள்ளது என்று, மியான்மார் பல்சமயத் தலைவர்கள், நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதம் கூறுகின்றது.

மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தலைமையில், அமைதிக்கு மதங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பல்சமயத் தலைவர்கள், மியான்மாரின் மாபெரும் சமய மரபுகளிலுள்ள பரிவிரக்கம், நல்வாழ்வைப் பகிர்தல் மற்றும் நீதியை வாழ்வதில், நாட்டின் எதிர்காலம் அமைந்துள்ளது எனத் தெரிவித்தனர்.  

கிறிஸ்தவ, புத்த, இந்து, இஸ்லாம் ஆகிய மதங்களின் தலைவர்களாகிய நாங்கள், அமைதியின் நம்பிக்கையோடு, ஒருமைப்பாட்டுணர்வில் இக்கடிதத்தை எழுதுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

கர்தினால் போ அவர்களால் வழிநடத்தப்படும் அமைதிக்கு மதங்கள் என்ற கழகத்தின் அனைத்து உறுப்பினர்களும், மியான்மாரின் எதிர்காலத்திற்காகச் செபிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.