2018-05-11 15:43:00

புலம்பெயர்ந்த சிறாரின் தரமான கல்விக்கு திருப்பீடம் ஆதரவு


மே,11,2018. புலம்பெயர்ந்த சிறாருக்கு தரமான கல்வியை ஊக்குவிக்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கொள்கைகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது திருப்பீடம்.

புலம்பெயர்ந்தோர் குறித்த உலகலாவிய ஒப்பந்தம் பற்றி, ஜெனீவாவில் நடைபெற்ற நான்காவது கூட்டத்தில், உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், இவ்வாறு கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையின் பல நிறுவனங்கள், புலம்பெயர்ந்தோரின் நலவாழ்வு மற்றும் கல்விப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றும், மனித வர்த்தகம், கட்டாய வேலை மற்றும் ஏனைய அடிமைத்தன அமைப்புகளிடமிருந்து, புலம்பெயர்ந்த சிறாரைப் பாதுகாப்பதற்கு உதவியாக, அவர்களுக்கு விரைவிலேயே தரமான கல்வி வழங்கப்படுவது அவசியம் என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

மக்களுக்கும், சமூகங்களுக்கும் பொருளாதாரத் தேவைகள் இருக்கின்றவேளை, அவர்களின் வளர்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும், ஆன்மீக, சமூக மற்றும் அரசியல் கூறுகளும் அவசியமாகின்றன என்பதையும், ஐ.நா. கூட்டத்தில் சுட்டிக்காட்டினார், பேராயர் யுர்க்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.