2018-05-01 16:32:00

தென் சூடானில் சமூக நலப்பணியாளர்கள் குழு விடுதலை


மே,01,2018. ஏப்ரல் 25ம் தேதி, கடந்த புதன் முதல், தென் சூடானில், ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 10 சமூக நலப்பணியாளர்கள் ஏப்ரல் 30, இத்திங்களன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தென் சூடான் Yei என்ற நகரருகே ஆயுதக் கும்பல் ஒன்றால், சிறைவைக்கப்பட்டிருந்த இந்த சமூகப்பணியாளர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு, ஜூபா நகரில் மருத்துவ சோதனைகளுக்குப்பின், நலமுடன் இருப்பதாக உரைத்த, ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் பொதுச்செயலர் Henrietta H. Fore அவர்கள், இவர்களின் விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும், மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளோரை தடுத்து நிறுத்துவதோ, அல்லது, அவர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதோ, நிறுத்தப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

Tore என்ற நகரின் மனிதாபிமான தேவைகள் குறித்து ஆய்வுச் செய்வதற்காக Yei என்ற நகரிலிருந்து கிளம்பிச் சென்ற இந்த சமூகப்பபணியாளர்கள் குழுவை, கடந்த புதனன்று, ஆயுதம் தாங்கிய குழு சிறை பிடித்தது. இந்த குழுவின் 10 பேரில் யுனிசெஃப் அமைப்பின் இரு பணியாளர்களும் அடங்குவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.