2018-05-01 16:18:00

சிறுபான்மை மதத்தவர்க்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில் அதிகம்


மே,01,2018. இந்தியாவில், சிறுபான்மை மதத்தவருக்கு எதிராகவும், ஏழை தலித் மக்களுக்கு எதிராகவும் இடம்பெற்றுவரும் வன்முறைகளை தடுப்பதற்கு அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது, அனைத்துலக மத விடுதலைக் குறித்து கண்காணிக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அமைப்பு.

கடந்த ஈராண்டுகளில் பிரிவினைவாத‌ வன்முறைகள் அதிகரித்துள்ளதாக அரசு புள்ளி விவரங்களே தெரிவிக்கின்ற போதிலும், அவ்வன்முறைகளை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடவில்லை எனக் கூறும் இந்த அமைப்பு, பல கலாச்சாரங்கள், மற்றும், பல மதங்கள் என்ற வரலாற்றைக் கொண்டுள்ள இந்தியாவில், மதத்தின் அடிப்படையில் தேசியத் தனித்தன்மைவாதத்தைப் புகுத்த எண்ணுவது, பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு, இந்தியாவில் இடம்பெற்ற 822 பிரிவினைவாத மோதல்களில் 111பேர் கொல்லப்பட்டுள்ளனர், 2,384 பேர் காயமடைந்துள்ளனர்.

2016ம் ஆண்டில் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 348 ஆக இருந்தது, 2017ல் 736 ஆக அதிகரித்துள்ளது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.