2018-04-06 15:08:00

ஐ.நா.வின் உலகளாவிய இலக்கை நோக்கி ஜப்பான் விளையாட்டு வீரர்கள்


ஏப்.06,2018. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 2030ம் ஆண்டின் வளர்ச்சித்திட்ட இலக்குகள் நிறைவேற்றப்படுவதற்கு, 2020ம் ஆண்டின் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரு வாய்ப்பாக உள்ளதாக, ஜப்பான் விளையாட்டு வீரர்கள் அறிவித்துள்ளனர்.   

ஏப்ரல் 06, இவ்வெள்ளிக்கிழமையன்று, உலக விளையாட்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு கூறியுள்ளார், 2004ம் ஆண்டில் ஏத்தென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜப்பான் வீரர், Koji Murofushi.

2020ம் ஆண்டின் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ஜப்பானில் நடைபெறவுள்ளவேளை, ஐ.நா.வின் உலகளாவிய வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்ற, இப்போட்டிகள் ஒரு வாய்ப்பாக உள்ளதாக, கூறியுள்ளார், Koji Murofushi.

வளர்ச்சி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதற்காக, உலக விளையாட்டு நாளை, 2013ம் ஆண்டில் ஐ.நா.பொது அவை உருவாக்கியது. 1896ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தான், முதல் நவீன ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

மேலும், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இரண்டாவது நாளான இவ்வெள்ளிக்கிழமையன்று, மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியின், 53 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் சஞ்ஜிதா சானு அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மணிப்பூரைச் சேர்ந்த சஞ்ஜிதா அவர்கள், 2014ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும், இவ்வியாழக்கிழமை, மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில், பளு தூக்குதல் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு அவர்கள் தங்கமும், ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதலில், குருராஜா அவர்கள் வெள்ளிப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.