2018-04-05 14:48:00

ஆர்மேனிய அரசுத்தலைவர், முதுபெரும் தந்தையருடன் திருத்தந்தை


ஏப்.05,2018. வத்திக்கான் தோட்டத்தில் நிறுவப்பட்டிருந்த அர்மேனியா நாட்டின் புனித கிரகோரியின் உருவச்சிலையை ஏப்ரல் 5, இவ்வியாழன் மதியம் 12 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த சிலைத் திறப்பு நிகழ்வில், அர்மேனிய அரசுத்தலைவர், Serzh Sargsyan, அர்மேனிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை, 20ம் Krikos Bedros, முதுபெரும் தந்தை இரண்டாம் Karekin, மற்றும் அர்மேனிய அப்போஸ்தலிக்க சபையின் தலைவர் முதலாம் Aram ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு முன்னதாக, காலை பத்து மணியளவில், அர்மேனிய அரசுத்தலைவர் Serzh Sargsyan அவர்களையும், உடன் வந்திருந்த அரசு அதிகாரிகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

அர்மேனியா நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட தூதரகத் தொடர்புகள் குறித்தும், கத்தோலிக்கத் திருஅவை அந்நாட்டில் ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டன.

திருத்தந்தையைச் சந்தித்த அரசுத்தலைவர் Serzh Sargsyan அவர்கள், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே, முதுபெரும் தந்தை இரண்டாம் Karekin, மற்றும் அர்மேனிய அப்போஸ்தலிக்க சபையின் தலைவர் முதலாம் Aram ஆகிய இருவரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில், தனித்தனியே சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.