2018-04-04 15:24:00

புனிதவாரத்தில் திருமுழுக்கு பெற்ற முன்னாள் வியட்நாம் பிரதமர்


ஏப்.04,2018. வியட்நாம் போரில் தளபதியாகவும், பின்னர், 1969ம் ஆண்டு முதல், அந்நாட்டின் பிரதமராகவும் பணியாற்றிய, Trần Thiện Khiêm அவர்கள், இவ்வாண்டு புனித வாரத்தில் திருமுழுக்கு பெற்றார் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

1960களில் வியட்நாம் நாட்டில் நிலவிய கடுமையான போர்ச் சூழலில் படைத் தளபதியாகவும், பின்னர் அந்நாட்டின் பிரதமராகவும் பணியாற்றிய Khiêm அவர்கள், தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்.

கலிபோர்னியாவின் Milpitas நகரின் புனித எலிசபெத் பங்குத்தளத்தில் நடைபெற்ற புனித வார நிகழ்வுகளின்போது, Khiêm அவர்கள், தன் 93வது வயதில், திருமுழுக்குப் பெற்றார் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

கத்தோலிக்க மறை தன்னை சிறுவயது முதல் பெரிதும் கவர்ந்து வந்தது என்றும், தான் திருமுழுக்கு பெற்ற நாள், தன் வாழ்வில் மிக மகிழ்வான நாள் என்றும் Khiêm அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.