2018-04-04 15:21:00

இமயமாகும் இளமை: ஏப்ரல் 1, மரக்கன்று நடும் 'ஏப்ரல் கூல்' நாள்


ஆங்கிலேயர்களின் போர் வியூகங்களை உடைத்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிஸ்மார்க் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் முதல் தேதியை, 'அறிவாளிகள் தினமாக' அந்நாட்டினர் கொண்டாடினர். இதைக் கண்டு எரிச்சலடைந்த இங்கிலாந்து நாட்டினர், அந்நாளை 'முட்டாள்கள் தினமாக' அறிவித்தனர். தற்போது சமூக ஆர்வலர்கள், இந்நாளை 'ஏப்ரல் கூல் (April Cool)' என மாற்றி, மரக்கன்றுகள் நடுவதை, சமூக ஊடகங்கள் வழியாக ஊக்குவித்து வருகின்றனர். சின்னமனுார் 'துளிர்வனம்' அமைப்பினர், பென்னி குவிக் சங்கத்தினருடன் இணைந்து, 'ஏப்ரல் கூல்' தினத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தனர். துளிர்வனம் செயல்பாட்டாளர் சூர்யவேந்தன் அவர்கள் கூறுகையில், ''வனத்திற்குள் சின்னமனுார் என்ற நிலையை உருவாக்க, விடுமுறை நாட்களில் மரக்கன்றுகள் நடவு செய்கிறோம். சில இடங்களில் போதிய பராமரிப்பில்லாததால் மரக்கன்றுகள் கருகி விட்டன. இதனால், மரம் வளர்க்க ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து மரக்கன்றுகள் நடவு செய்கிறோம். அடுத்த ஆண்டும் ஏராளமானோர் மரக்கன்று நடவு செய்ய முன்வருவர் என எதிர்பார்க்கிறோம். மரக்கன்று நடவு மற்றும், பராமரிப்பு குறித்து, துளிர்வனம் அமைப்பினரைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.