2018-03-29 12:09:00

கைதிகளின் காலடிகளைக் கழுவும் திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,29,2018. திருப்பலி, பாஸ்கா மறைப்பொருள் ஆகியவற்றை மையப்படுத்தி சிறப்பிக்கப்படும் புனித வியாழனன்று, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "திருப்பலி வழியே கிறிஸ்துவின் பாஸ்கா மறைப்பொருளில் நாம் நுழைவதால், சாவிலிருந்து வாழ்வுக்கு அவருடன் அனுமதிக்கப்படுகிறோம்" என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.

மார்ச் 29, புனித வியாழன் மாலை, 4.30 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'Regina Coeli' என்றழைக்கப்படும் சிறைக்கூடத்தில், இயேசுவின் இறுதி இரவுணவுத் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

இத்திருப்பலியில், திருத்தந்தையால் காலடிகள் கழுவப்பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 12 கைதிகளில், 4 பேர் இத்தாலியர், ஏனையோர், பிலிப்பீன்ஸ், மொராக்கோ, மால்தோவா, கொலம்பியா, நைஜீரியா மற்றும் சியெரா லியோனே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

பன்னிருவரில் எட்டு பேர் கத்தோலிக்கர், இருவர், இஸ்லாமியர், ஒருவர் ஆர்த்தடாக்ஸ் சபையினர், மற்றொருவர் புத்த மதத்தினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சிறைக்கூடத்தில் உள்ள அனைத்து கைதிகளையும் சந்திக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.