2018-03-21 15:36:00

Down Syndrome உலக நாளுக்கு திருத்தந்தையின் டுவிட்டர்


மார்ச்,21,2018. Down Syndrome என்றழைக்கப்படும் குறைபாடு கொண்டோரை மையப்படுத்தி, உலக Down Syndrome நாள், மார்ச் 21, இப்புதனன்று சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"யாரையும் நாம் ஒதுக்கிவிட இயலாது, ஏனெனில், நாம் அனைவருமே சக்தியற்றவர்கள். நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு ஒரு கருவூலம், அவர் நம்மை தனித்தனி வகையில் வளர அனுமதிக்கிறார்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக பதிவு செய்துள்ளார்.

Down Syndrome என்ற குறைபாட்டை மையப்படுத்தி 1990ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த குறைபாடு உள்ளவர்களை சமுதாயத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாக, 2005ம் ஆண்டு, இந்த ஆய்வு மையம், மார்ச் 21ம் தேதியை Down Syndrome விழிப்புணர்வு நாளாக கடைப்பிடித்தது.

WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் பரிந்துரையால், 2007ம் ஆண்டு முதல், மார்ச் 21ம் தேதி, Down Syndrome உலக நாள், உலகெங்கும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.