2018-03-20 16:45:00

பிலிப்பீன்ஸ் பேராயருக்கு, ‘சுற்றுச்சூழல் நாயகன்’ விருது


மார்ச்,20,2018. பிலிப்பீன்ஸ் நாட்டின் வட பகுதியில், சுரங்கப் பணிகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலரான ஒரு கத்தோலிக்கப் பேராயருக்கு, சுற்றுச்சூழல் நாயகன் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது, அந்நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு, எடுத்துக்காட்டான நடவடிக்கைகளால் முயற்சித்துவரும்

ஆர்வலர்களுக்கும், குழுக்களுக்கும் வழங்கப்படும், Gawad Bayani ng Kalikasan விருது, Tuguegarao பேராயர், Sergio Utleg அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேராயர் Utleg அவர்கள், அச்சுறுத்தும் சூழல்களுக்கு மத்தியில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதியுடன் போராடினார் எனவும், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெற்ற சுரங்கப்பணிகள் மூடப்படுவதற்கு, இவர் ஆரம்பித்த, சுற்றுச்சூழல் ஆதரவு இயக்கங்கள் முக்கிய காரணம் என்றும் பாராட்டினார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய இயக்குனர் Owen Migraso. 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.