2018-03-13 15:31:00

சிரியாவில் தினமும் 37 பேர் பலி


மார்ச்,13,2018. சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும்மீறி குண்டுவீச்சு தாக்குதல்கள் நடைபெறும் பகுதியில், ஒவ்வொரு நாளும் குறைந்தது 37 அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுகின்றனர், இரண்டு அவசர மருத்துவ சிகிச்சை வாகனங்கள் தாக்கப்படுகின்றன, மருத்துவப் பணியாளர்கள், மூன்று பேருக்கு ஒருவர் வீதம் காயமடைகின்றனர் என்று, Save the Children பிறரன்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதில்லை எனவும், இவர்களில் பாதிப்பேர் சிறார் என்றும், அந்த அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது.  

கடந்த பிப்ரவரி பாதியில் கூட்டா பகுதியில் தொடங்கிய சண்டையில், 600க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இரண்டாயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

சிரியாவில், 35 இலட்சம் சிறார் உட்பட, குறைந்தது 76 இலட்சம் பேர், நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், இவ்வெண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்றும், ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.