2018-02-27 15:20:00

வத்திக்கான் கருத்தரங்கு : ‘ஒன்றிணைந்து குணப்படுத்தல்’


பிப்.27,2018. ‘ஒன்றிணைந்து குணப்படுத்தல்’ என்ற தலைப்பில், வருகிற ஏப்ரல் 26ம் தேதி முதல், 28ம் தேதி வரை, திருப்பீட கலாச்சார அவையும், Cura அறக்கட்டளையும், STOQ அறக்கட்டளையும் இணைந்து, வத்திக்கானில், நான்காவது பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளன.

நலவாழ்வு, நோய்களுக்கு எதிரான நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில், Meghan McCain, டாக்டர் Sanjay Gupta, Meredith Vieira, டாக்டர் Mehmet Oz போன்ற உலகப் புகழ்பெற்ற தலைவர்களுடன், டாக்டர் Max Gomez அவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் வருங்கால நம்பிக்கை குறித்து, கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில், உலகின் முன்னணி அறிவியலாளர்கள், மருத்துவர்கள், குடும்பங்கள், அறநெறியியல் வல்லுனர்கள், பல்சமயத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள் போன்ற பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த மூன்று நாள் கருத்தரங்கின் இறுதியில், இதில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் திருத்தந்தையையும் சந்திப்பார்கள்.

STOQ அறக்கட்டளை என்பது, அறிவியல், இறையியல் மற்றும் மெய்ப்பொருள் குறித்த  அமைப்பாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.