2018-02-20 12:41:00

காணாமல் போகும் இரு தமிழக வட்டார மொழிகள்


பிப்.19,2018. குறைந்த அளவு மக்கள் பயன்படுத்துவதால், 42 இந்திய மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும் என மொழியியல் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கோட்டா மற்றும் தோடா போன்ற தென் திராவிட மொழிகள் உட்பட, 42 மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும் பட்டியலில் உள்ளன என கூறும் இவர்கள், இந்த மொழிகளை, யாருமே பேசாத நிலை விரைவில் உருவாகும் என தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தக் கூடிய, 22 பட்டியலிடப்பட்ட மொழிகள், 100 பட்டியலிடப்படாத மொழிகள் புழக்கத்தில் உள்ள அதே நேரத்தில், 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்துவதால், 42 மொழிகள், வட்டார பேச்சு வழக்குகள் மிக விரைவில் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அழியும் நிலையிலுள்ள மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் பட்டியலில் மிகவும் அதிகமாக, அந்தமான் - நிகோபார் தீவுகளில் 11 மொழிகளும், மணிப்பூரில் ஏழு மொழிகளும் அழியும் நிலையில் உள்ளன.

ஆதாரம் : The Hindu /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.