2018-02-16 14:35:00

இமயமாகும் இளமை .....: சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்


திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பகுதியில் வசித்துவரும் செந்தில்குமார் என்ற இளைஞர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் தனது வலது காலை இழந்தார். இருந்தாலும் மனம் தளராமல், யோகா, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்ட யோகா, மற்றும், கயிற்றில் தொங்கியபடி யோகா செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு, பல்வேறு சாதனைகள் படைத்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ளார். சாதிக்க ஊனம் தடையில்லை என்று கூறும் இளைஞர் செந்தில்குமார் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை எண்ணி சோர்ந்துவிடாமல். தங்களுக்கு இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.