2018-02-14 16:52:00

விளிம்புகளில் வாழும் இளையோரைத் தேடிச் செல்வது...


பிப்.14,2018. இளையோரை மையப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல், 28ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம், மற்றும், 2019ம் ஆண்டு சனவரி மாதம் பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் ஆகியவற்றை குறித்து, பானமா நாட்டு ஆயர்கள் தங்கள் ஆண்டு கூட்டத்தில் விவாதித்தனர்.

இளையோர் உலக நாள் நிகழ்வுகள் நடைபெறுவதற்கு முன், இந்நாட்டு சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் இளையோரைத் தேடிச் செல்வது, இந்நாட்டு ஆயர்களின் முன் உள்ள பெரும் சவால் என்று, இளையோர் நாள் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் ஆயர் Manuel Ochogavía அவர்கள், பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

விளிம்புகளில் வாழும் இளையோரை, மதம், இனம் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி தேடிச் செல்வதும், அவர்களின் கருத்துக்களுக்குச் செவிமடுப்பதும் ஆயர்களின் முக்கியப் பணியாக அமையும் என்று ஆயர் Ochogavía அவர்கள், எடுத்துரைத்தார்.

பெரும்பான்மையான இலத்தீன் அமெரிக்க நாடுகளில், அரசியல் பிரச்சனைகள் நிகழ்வதை தங்கள் கூட்டத்தில் பேசிய பானமா ஆயர்கள், அரசியல் தலைவர்கள், இளையோரின் உண்மையான ஏக்கங்களுக்குச் செவிமடுப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.