2018-02-13 15:45:00

பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகச் செபிக்க...


பிப்.13,2018. திருஅவைக்குள் தவறான பாலியல் நடவடிக்கைகளால்  பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்காக, தவக்காலத்தில் நோன்பிருந்து செபிக்குமாறு, ஆஸ்திரேலிய ஆயர்கள், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிப்ரவரி 14, இப்புதனன்று தொடங்கும் தவக்காலத்தை, நான்கு நாள் நோன்பிருந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஆயர்கள், உடல் அளவிலும், மனத்தளவிலும், மேய்ப்பர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டவர்கள், மதிக்கப்பட்டு, நீதி நிறைந்த, வெளிப்படையான அடையாளங்களால் ஏற்கப்படுமாறு, தவத்துடன் செபிக்குமாறு கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள அனைத்துச் சிறாரும், வயதுவந்தோரும், இயேசுவுக்கு நெருக்கமானவர்களாகக் கொண்டுவரப்படுவதற்கு ஏற்ற இடமாக, ஒவ்வொரு பங்குத்தளமும் அமையுமாறு செபிக்கவும், விசுவாசிகளை வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள். ஆஸ்திரேலியத் திருஅவைக்குள், பாலியல்முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளோருக்காக, பிப்ரவரி 14, இப்புதன் முதல், 17 வருகிற சனிக்கிழமை  வரை, உண்ணா நோன்பிருந்து செபிக்குமாறு, ஆஸ்திரேலிய ஆயர் பேரவை தனது மேய்ப்புப்பணி அறிக்கையில் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.