2018-02-06 16:36:00

கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு, புதிய மேய்ப்புப்பணி திட்டம்


பிப்.06,2018. தெற்கு ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவை, இவ்வாண்டின் முதல் கூட்டத்தை அணமையில் நிறைவுச் செய்துள்ளது.

தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, சவாஸிலாந்து ஆகிய நாடுகளின் ஆயர்களை உள்ளடக்கிய SACBC எனும் ஆயர் பேரவை, இனவெறி மீது கட்டப்பட்ட நிறவெறி ஆதிக்கக் காலத்திலும், காலனி ஆதிக்கக் காலத்திலும், ஆயர்கள் செய்யத் தவறிய கடமைகள் குறித்து தங்கள் அணமைக் கூட்டத்தில் விவாதித்துள்ளது.

தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் திருஅவையின் 200 ஆண்டு கால வாழ்வில், சாதித்தவைகள் குறித்தும், 200ம் ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆப்ரிக்க நாடுகளின் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள், மற்றும், சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக, புதிய மேய்ப்புப் பணித் திட்டம் குறித்தும் இந்த ஆயர்கள் கூட்டம் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.