2018-02-05 15:26:00

மத்தியக் கிழக்கு குறித்து திருத்தந்தையுடன் துருக்கி தலைவர்


பிப்.05,2018. துருக்கி அரசுத் தலைவர் Tayyp Erdogan அவர்கள், இத்திஙகள் காலை, திருப்பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடன் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின், திருப்பீடச்செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட வெளியுறவுத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார், அரசுத் தலைவர் Erdogan.

திருப்பீடத்திற்கும் துருக்கி நாட்டிற்கும் இடையே நிலவும் அரசியல் உறவுகள், அந்நாட்டில் திரு அவையின் நிலை, புலம்பெயர்ந்தோருக்கு துருக்கியில் கிட்டும் வரவேற்பு போன்றவை விவாதிக்கப்பட்டதாகவும், அதன் பின், மத்தியக்கிழக்குப் பகுதியின் இன்றைய நிலைகள், குறிப்பாக, எருசலேமின் நிலை குறித்தும், அமைதி ஊக்குவிக்கப்படுதல், மற்றும், உரையாடல்கள் வழியாக நிலையான தன்மையை கொணர்தல், மனித உரிமைகள் மதிக்கப்படுதல் போன்றவை குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை வெளியிட்ட செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.