2018-02-02 15:33:00

பெங்களூருவில் இந்திய ஆயர்கள் கூட்டம் பிப்ரவரி 2-9


பிப்.02,2018. இந்தியாவின் 170க்கும் மேற்பட்ட மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 200 ஆயர்கள், பெங்களூருவில், பிப்ரவரி 2, இவ்வெள்ளியன்று, தங்களின் 33வது கூட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், மியான்மாரின் யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றுவார்.

இந்தியாவில் திருஅவையின் மறைப்பணியை வலியுறுத்தும் அதேவேளை, பன்மையில் ஒற்றுமையைக் காக்கும் பல்வேறு வழிகளை, ஆயர்கள் இந்தக் கூட்டத்தில், கலந்துரையாட உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்திய ஆயர்களின் இக்கூட்டம் “உலகம் முடியும்வரை நான் எந்நாளும் உங்களோடு இருப்பேன் (மத்.28:20)” என்ற தலைப்பில் இடம்பெற்று வருகிறது.

CBCI எனப்படும் இந்திய ஆயர்கள் பேரவை, 174 மறைமாவட்டங்களையும், 204 ஆயர்களையும், 64 ஓய்வு பெற்ற ஆயர்களையும் கொண்டு, உலகில் நான்காவது பெரிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையாக விளங்குகிறது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.