2018-01-30 16:09:00

மாசுகேட்டை குறைப்பதற்கு பிளாஸ்டிக் பயன்பாடு நிறுத்தப்பட...


சன.30,2018. இலங்கையில், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் சாமான்களுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்யும்முறை சட்டப்படி கட்டாயப்படுத்த வேண்டும் என்று, அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில், 2 கோடி சாப்பாட்டு தட்டுகள், 1 கோடியே 50 இலட்சம் பிளாஸ்டிக் பைகள், ஒரு கோடி காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழலில் கொட்டப்படுகின்றன என்று கூறும் ஆர்வலர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கும் இரு நிறுவனங்கள் பெருமளவில் இலாபம் ஈட்டுகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

CEJ எனப்படும், சுற்றுச்சூழல் நீதிக்குரிய அறக்கட்டளையை ஆரம்பித்து, அதன் இயக்குனராகப் பணியாற்றும் Hemantha Vithanage அவர்கள் பேசுகையில், சுற்றுச்சூழலை மாசின்றி அமைப்பதே தனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சாப்பாட்டு தட்டுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை, இலங்கை அரசு, 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தடைசெய்திருந்தாலும், அப்பொருள்கள் சுற்றுச்சூழலில் தொடர்ந்து கொட்டப்படுகின்றன என்று கூறினார், Hemantha Vithanage.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.