2018-01-27 15:49:00

சிரியா வன்முறையில் சிறார் இறப்பு அதிகரிப்பு


சன.27,2018. சிரியா நாட்டின் பல பகுதிகளில் வன்முறை அதிகரித்துவரும்வேளை, கடந்த இரு வாரங்களில் இறந்துள்ள சிறாரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும், இந்நிலையைப் பார்த்து உலகம் மௌனமாக இருக்கக் கூடாது என்றும், ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிரியாவில் ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சண்டையில், சிறார் தொடர்ந்து, அதிகம் பாதிக்கப்படுவது குறித்து, கவலை தெரிவித்துள்ள, யுனிசெப் நிறுவனத்தின் தலைவர் Fran Equiza அவர்கள், சிறார் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு உலகம் மௌனமாக இருக்கின்றதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிரியாவில், இதுவரை இல்லாத அளவுக்கு, அழிவுகளும் புலம்பெயர்வுகளும், மரணங்களும் இடம்பெறுவதைக் குறிப்பிட்டுள்ள Equiza அவர்கள், சனவரி 22ம் தேதி தமாஸ்கு நகரில் இடம்பெற்ற கடுமையான தாக்குதல், சிறார் பள்ளி முடிந்து திரும்பும் நேரத்தில் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

சிறார், தங்கள் வாழ்வையும், வீடுகளையும், குழந்தைப் பருவத்தையும் இழந்துள்ளனர் என்றும், இதுவரை நடந்தது போதும், இனியும் இந்தக் கொடுமை வேண்டாம் என்றும்,    Equiza அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.