2018-01-26 14:54:00

இமயமாகும் இளமை …....: சாலைகளை சீர்செய்ய களம் இறங்கிய இளையோர்


ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி கிராமத்தில், திருப்பத்தூர் - சேலம் செல்லும் முக்கிய சாலை உள்ளது. இச்சாலை வழியாக நாள்தோறும் பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும். இந்நிலையில், உப்பாரப்பட்டி, கெங்கபிராம்பட்டி, ஊத்தங்கரை வரை செல்லும் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறியது. அடிக்கடி விபத்துகளும் நடந்து வந்தது. மழை பெய்தால் பள்ளமான சாலையில் மழைநீர் தேங்கத் துவங்கியது. இச்சாலையை சீரமைக்க வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து செங்கன்கொட்டவூரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து, தங்கள் சொந்த செலவில், மினி வேனில், மண்ணை எடுத்துச் சென்று, பள்ளமான பகுதிகளில் கொட்டி, சீர் செய்துள்ளனர்.

“தற்போது நாங்கள் தற்காலிகமாகத்தான் சாலையை மண் கொண்டு சீரமைத்துள்ளோம். மழை தொடர்ந்து பெய்தால், பள்ளத்தில் கொட்டப்பட்ட மண் இருக்காது. எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் விண்ணப்பித்துள்ளனர், இந்த இளையோர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.