2018-01-25 15:14:00

இந்தியாவின் 69வது குடியரசு தினம், ஒரு பகிர்வு


சன.25,2018. சனவரி 26 இவ்வெள்ளி, இந்தியாவின் 69வது குடியரசு தினம். குடியரசு என்பது, குடிமக்களின் அரசு, அதாவது மக்களாட்சி என்று பொருள். மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம். டாக்டர் அம்பேத்கார் தலைமையிலான ஆன்றோர் குழு உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் 1950 ஜனவரி 26. சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. இந்நாளில், அகிம்சை வழியில் பல போராட்டங்களையும் நிகழ்த்தி, தாய் நாட்டிற்காக தங்களையே அர்ப்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் தியாகிகளையும் நினைவுக்கூர்கின்றோம். இந்நாளையொட்டி, இந்திய குடியரசின் வரலாறு, அதன் நோக்கம், இன்றைய உண்மை நிலை, இவ்விழா உணர்த்தும் செய்தி, நம் கனவும், செயலாக்கமும் ஆகிய ஐந்து முக்கிய தலைப்புகளில், வத்திக்கான் வானொலியில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார், அருள்பணி பிரிட்டோ, கப்புச்சின் துறவு சபை 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.