2017-12-16 15:16:00

ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கவனத்திற்குரியது


டிச.16,2017. சிறார்கள் தவறான பாலுறவுக்கு உட்படுத்தப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, கடந்த பல ஆண்டுகளின் நிகழ்வுகளை உள்ளடக்கியதாகவும், தீவிர கவனத்திற்கு உள்ளாக்கப்பட்ட வேண்டியதாகவும் உள்ளது என்று, திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தலத்திருஅவையைச் சார்ந்த விசுவாசிகள், துறவறத்தார், மற்றும் அருள்பணியாளர்கள் அனைவரோடும் தன் நெருங்கிய அக்கறையை வெளியிடும் திருப்பீடம், பாலுறவு முறையில் பாதிக்கப்பட்டோருக்குச் செவிமடுத்து, அவர்களுக்கு குணமும், நீதியும், வழங்கும் திருஅவையின் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை தெரிவிக்கிறது.

துன்புறுவோருக்கு ஆறுதல் வழங்கும் இடமாக விளங்கும் திருஅவை, சிறார்களுக்கு பாதுகாப்பான ஒரு வாழ்வுச் சூழலை உருவாக்கித் தருவதில், தீவிர அர்ப்பணத்தோடு செயலாற்றுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் கூறிய சொற்களையும், திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.