2017-12-07 16:11:00

போஸ்னியா-ஹெர்ஸகொவீனா பிரதமருடன் திருத்தந்தை


டிச.07,2017. டிசம்பர் 7, இவ்வியாழன் காலை, போஸ்னியா-ஹெர்ஸகொவீனா நாட்டு பிரதமர், Denis Zvizdić அவர்களும், அரசின் உயர் அதிகாரிகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினர்.

15 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், வத்திக்கானுக்கும், போஸ்னியா-ஹெர்ஸகொவீனா நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பு குறித்தும் பேசப்பட்டது.

பிரதமர் Denis Zvizdić அவர்கள், திருத்தந்தையுடன் மேற்கொண்ட இச்சந்திப்பிற்குப் பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் நேரடிச்செயலர், அருள்பணி Antoine Camilleri அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

மேலும், "இறைவன் வழங்கியுள்ள திறமைகள் நம் அனைவருக்கும் உண்டு. அடுத்தவருக்கு உதவிகள் செய்வதற்கு தன்னிடம் எதுவும் இல்லை என்று சொல்லுமளவு ஒருவரும் வறுமைப்பட்டிருப்பது கிடையாது" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 7, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.