2017-11-27 15:47:00

எகிப்து, உக்ரைன் மக்களுக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு


நவ.27,2017. எகிப்து நாட்டின் வட சீனாய் பகுதியில், இஸ்லாமியத் தொழுகைக் கூடத்தில் வெள்ளியன்று நடந்த வெறித்தனமான கொலைகள் தனக்கு ஆழ்ந்த வேதனையைத் தந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

காயப்பட்டிருக்கும் எகிப்து நாட்டு சமுதாயத்திற்கும், இந்தக் கொடுமை நேரத்தில் மக்களுக்கு உதவிகள் செய்த அனைவருக்கும் செபிக்கும்படி விண்ணப்பித்த திருத்தந்தை, புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த அனைவரோடும் சில மணித்துளிகள் அமைதியில் செபித்தார்.

மேலும், 80 ஆண்டுகளுக்கு முன்னர், இரஷ்யாவில் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், பட்டினிச் சாவுகளுக்கு உள்ளாக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்கள், அந்நிகழ்வை, Holodomor கொடுமை என்று நினைவுகூர்வதையும், திருத்தந்தை தன் உரையின் இறுதியில் சுட்டிக்காட்டி, அவர்களுக்காகவும் செபித்தார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.