2017-11-17 14:34:00

மதுபானங்களுக்கு எதிராக கேரள ஆயர்கள் பேரணி


நவ.17,2017. மதுபானங்கள் மற்றும் போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை  உருவாக்கும் நோக்கத்தில், கேரள கத்தோலிக்க ஆயர்கள், 18 நாள் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

கேரள ஆயர்கள் பேரவை சார்பில், திருவனந்தபுரம் பேராயர் சூசை பாக்யம் அவர்கள், நவம்பர் 15, இப்புதனன்று, திருவனந்தபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் இப்பேரணியைத் துவக்கி வைத்தார்.

இப்பேரணி பற்றி, பேராயர் சூசை பாக்யம் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில், கிரிக்கெட் வீரர், விராட் கோலி, முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகிய இருவரின் ஈடுபாட்டுடன் கேரள காவல்துறையால் ஆரம்பிக்கப்பட்ட, போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை, பொதுமக்களைக் கவரும் விதத்தில் நடத்தப்பட்ட அரசியல் நாடகம் என்றும், இது மக்களை முட்டாள்களாக்க நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், இப்பேரணியை தலைமையேற்று நடத்தும் தாமரசேரி ஆயர் Remigiose Inchananiyil அவர்கள் பேசுகையில், கேரளாவில், ஆளும் கம்யூனிச கட்சியின் இரட்டை வேட மற்றும் வெளிவேட நிலைமைகளை வெளிக்கொணரும் நோக்கத்திலும், இப்பேரணி நடத்தப்படுகின்றது என்று கூறினார்.

பல்வேறு பள்ளிகள் மற்றும் பொது இடங்கள் வழியாக நடைபெறும் இவ்விழிப்புணர்வு பேரணி, டிசம்பர் 2ம் தேதி Kasaragod மாவட்டத்தில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN/The Hindu / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.