2017-11-15 15:09:00

மனிதவியல் சந்திக்கும் புதிய சவால்கள் – திருப்பீட கருத்தரங்கு


நவ.15,2017. மருத்துவ உலகில் பயன்படுத்தப்படும் மரபணு மாற்ற முயற்சிகள், மற்றும் ஏனையத் தொழில் நுட்பங்கள் மனித உடலை எவ்வகையில் பாதிக்கின்றன, அதனால் எழும் நன்னெறி தாக்கங்கள் ஆகியவற்றை மையப்படுத்திய ஒரு கருத்தரங்கு, நவம்பர் 15, இப்புதன் முதல், 18 வருகிற சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறுகிறது.

கலாச்சாரத் திருப்பீட அவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கு, மனிதவியல் சந்திக்கும் புதிய சவால்கள் என்ற தலைப்பில் நடைபெறுகிறது.

உரோம் நகரின் இயேசு சபை தலைமையகத்தில் அமைந்துள்ள பொது அவை அரங்கத்தில் நடைபெற்றுவரும் இந்தக் கருத்தரங்கில், இப்புதன் காலை, கலாச்சாரத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் ஜியான்பிராங்கோ இரவாசி அவர்கள் துவக்க உரையாற்றினார்.

மருத்துவத் தொழில்நுட்பங்கள், செயற்கை அறிவுத்திறன், மரபணு மாற்றங்கள் என்ற பல துறைகளைச் சார்ந்தவர்கள், இறையியல், நன்னெறி ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் விவாதங்களை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.