2017-11-15 14:59:00

மங்களூருவில் தனித்துவமிக்க செபமாலைக் கண்காட்சி


நவ.15,2017. 50000த்திற்கும் மேற்பட்ட செபமாலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமிக்க கண்காட்சி, இந்தியாவின் மங்களூருவில் அண்மையில் நிறைவுற்றது.

80 நாடுகளிலிருந்து கொணரப்பட்ட 50000த்திற்கும் அதிகமான செபமாலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கண்காட்சியை, மங்களூரு ஆயர் Aloysius Paul D'Souza அவர்கள் திறந்து வைத்தார்.

மங்களூருவின் செபமாலை அன்னை பேராலயத்தின் 450ம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்திருந்த இந்தக் கண்காட்சி, கேரளாவைச் சேர்ந்த Sabu Caiter என்பவரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.

புனித அன்னை தெரேசா அவர்கள் பயன்படுத்திய செபமாலை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அர்ச்சிக்கப்பட்ட செபமாலை ஆகியவை உட்பட, Sabu Caiter அவர்கள் சேகரித்துள்ள 50000த்திற்கும் அதிகமான செபமாலைகள், மற்றும் 200க்கும் அதிகமான அன்னை மரியாவின் திரு உருவங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.