2017-11-10 15:40:00

இயேசுவின் கல்லறையை முப்பரிமாண மெய்நிகர் பயணமாக...


நவ.10,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர் வாஷிங்க்டனில் இயங்கிவரும் National Geographic அருங்காட்சியகம், இயேசுவின் கல்லறையை முப்பரிமாண மெய்நிகர் பயணமாகக் காணும் வசதிகளை விரைவில் செய்து தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம், மற்றும் உடல் நிலை காரணமாக, புனித பூமிக்கு நேரடியாகச் சென்று, கிறிஸ்துவின் கல்லறையைக் காண முடியாதவர்களுக்கு, இது ஒரு பெரும் வாய்ப்பாக அமையும் என்று CNA  கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

பேரரசன் கான்ஸ்டன்டைன் அவர்களின் தாய் புனித ஹெலெனா அவர்களின் முயற்சியால் அடையாளப்படுத்தப்பட்ட கிறிஸ்துவின் கல்லறை, 4ம் நூற்றாண்டு முதல் மக்களின் வணக்கத்தைப் பெற்று வந்துள்ளது.

326ம் ஆண்டு, பேரரசன் கான்ஸ்டன்டைன் அவர்கள், அக்கல்லறை மீது எழுப்பிய கோவில், அண்மையில் மீண்டும் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

National Geographic அருங்காட்சியகம் உருவாக்கியுள்ள இக்கல்லறைக் கோவிலின் முப்பரிமாண மெய் நிகர் பயணம், இம்மாதம் 15ம் தேதி முதல், 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.