2017-11-08 16:00:00

தென் ஈராக்கில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ பள்ளி


நவ.08,2017. இளைய தலைமுறையினருக்கு கல்வி வழங்குவதன் வழியே, மனித விழுமியங்களையும், நன்னெறியையும் உறுதி செய்வதும், இறையரசை இவ்வாறு பறைசாற்றுவதும் திருஅவையின் முக்கிய பணி என்று, ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை பேராயர் ஒருவர் கூறினார்.

ஈராக் நாட்டின் தென் பகுதியில், பாஸ்ரா (Basra) எனுமிடத்தில், கிறிஸ்தவ கல்விக்கூடம் ஒன்றை நிறுவுவதைக் குறித்து, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில், பேராயர் Alhava Habib Jajou அவர்கள் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவருக்கும் கல்வி புகட்டும் வண்ணம் உருவாக்கப்படும் இந்தப் பள்ளியில், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஆசிரியர்களாகப் பணியாற்றுவர் என்று பேராயர் Jajou அவர்கள் கூறினார்.

Tuwaisah எனுமிடத்தில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு மரியாவின் பங்கில் கட்டப்படும் இப்பள்ளி, தென் ஈராக் பகுதியில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு துவக்கப்படும் கிறிஸ்தவ பள்ளி என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.