2017-11-06 15:55:00

வருங்காலத் தலைமுறையை கருத்தில் கொண்டு, இயற்கையை காப்போம்


நவ.06,2017. இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள்கிழமை டுவிட்டர் செய்தியிலும் அதே கருத்திற்காக விண்ணப்பித்துள்ளார்.

'போர் எப்போதும் சுற்றுச் சூழலுக்கு தீவிர அழிவையேக் கொணர்கிறது. நம் பொது இல்லமாகிய இவ்வுலகை தவறாகப் பயன்படுத்தாமல், நம் வருங்கால தலைமுறைகளைக் கருத்தில்கொண்டு, அக்கறையுடன் செயல்பட வேண்டும்' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி அழைப்பு விடுக்கிறது.

இஞ்ஞாயிறன்று திருத்தந்தை விடுத்த டுவிட்டர் செய்தி, 'மரணத்தின் மீது வெற்றிவாகைச் சூடினார் இயேசு, அவரே நம் வாழ்வும் உயிர்ப்பும். இந்த நம்பிக்கைச் செய்திக்கு சாட்சிகளாக இருப்போம்' என்ற அழைப்பை விடுப்பதாக இருந்தது.

மேலும், ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும், 'அத் லிமினா' சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்திருந்த பரகுவாய் நாட்டு ஆயர்களை, இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.