2017-10-31 15:30:00

காசநோயை ஒழிப்பதற்கு அரசியல் ஒத்துழைப்பு அவசியம்


அக்.31,2017. TB எனப்படும் காசநோய்க் கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்குரிய உலகளாவிய முயற்சிகளால், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து 5 கோடியே 30 இலட்சம் பேரின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது மற்றும் இந்நோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் 37 விழுக்காடாகக் குறைந்துள்ளது எனினும், 2016ம் ஆண்டில் இடம்பெற்ற தொற்றுநோய் இறப்புகளுக்கு, இந்நோயே முதல் காரணமாக அமைந்திருந்தது என்று, உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

‘உலக அளவில் TB 2017’ என்ற அறிக்கையை வெளியிட்டுப் பேசிய, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள், 2030ம் ஆண்டுக்குள் உலகில் காசநோயை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு, அரசியல் மட்டத்தில் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறினார்.

மாஸ்கோவில் நடைபெறவுள்ள, காசநோயை ஒழிப்பது குறித்த உலகளாவிய அமைச்சர்கள் கருத்தரங்கும், அதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டில், இந்நோய் குறித்த ஐ.நா. பொது அவையின் உயர்மட்ட அளவிலான கூட்டமும், 2030க்குள் உலகில் காசநோயை ஒழிப்பதற்கான முயற்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார், Ghebreyesus.

HIV நோய்க் கிருமிகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் ஏறத்தாழ 5 இலட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு உள்ளது என்று, WHO நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.