2017-10-27 15:59:00

வத்திக்கானில் டிசம்பர் 7ல் கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம்


அக்.27,2017. கிறிஸ்மஸ் காலத்தில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை அலங்கரித்திருக்கும் பெரிய கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும், வருகிற டிசம்பர் 7ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கென தயாரிக்கப்படும் கிறிஸ்மஸ் குடிலில் வைக்கப்படும் உருவங்கள் மற்றும் அதன் அமைப்பை, தென் இத்தாலியின் Campania மாநிலத்திலுள்ள தொன்மையான Montevergine ஆதீனம் வழங்குகின்றது. 18ம் நூற்றாண்டு நேப்பிள்ஸ் மரபை இவை பிரதிபலிக்கும்.

தூய பேதுரு வளாகத்தில் வைக்கப்படும் பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரம், 28 மீட்டர் உயரம் கொண்டது. போலந்தின் வட கிழக்குப் பகுதியிலுள்ள Elk உயர்மறைமாவட்டம் இதனை வழங்குகின்றது. இம்மரம், உள்ளூர் வனப்பாதுகாப்புப் பணியாளர்களால் வெட்டப்பட்டு, மத்திய ஐரோப்பா மற்றும் இத்தாலி வழியாக, 2000த்திற்கு மேற்பட்ட கிலோ மீட்டர்கள் தூரத்தைக் கடந்து வத்திக்கான் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.