2017-10-26 14:27:00

நேர்காணல் –– முத்திப்பேறுபெற்ற 109 கிளேரிசியன் மறைசாட்சிகள்


அக்.26,2017. 1936ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி முதல் 1939ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாந்தேதி வரை, இஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுச் சண்டை நடந்தது. இதில் இஸ்பெயின் நாடு கடுமையாய்ப் பாதிக்கப்பட்டது. இச்சண்டையில் புரட்சியாளர்கள் வெற்றி பெற்றனர். ஏராளமான துறவு நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. ஏராளமான திருஅவை உறுப்பினர்கள் கொலைசெய்யப்பட்டனர். இதில் கொலைசெய்யப்பட்ட கிளேரிசியன் துறவு சபையைச் சார்ந்த 109 மறைசாட்சிகள், முத்திப்பேறுபெற்றவர்கள் என்று, அக்டோபர் 21, கடந்த சனிக்கிழமையன்று, பார்சலோனாவில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு பற்றி கிளேரிசியன் சபை அ.பணி ரோஹன் டோமினிக் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார். இலங்கையைச் சேர்ந்த இவர், ஐ.நா. நிறுவனத்தில், கிளேரிசியன் சபை பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.