2017-10-24 16:03:00

போலியோ நோய் பாதிப்பு குறைந்து வருகிறது


அக்.24,2017. உலகில் போலியோ நோய்க் கிருமிகளால் இவ்வாண்டில் 12 பேரே தாக்கப்பட்டுள்ளனர் என்றும், இது ஒரு சாதனை என்றும், ஐ.நா.வின் அவசரகால குழந்தை நல அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.

அக்டோபர் 24, இச்செவ்வாயன்று போலியோ நோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் நிறுவனம், போலியோவால், ஆப்கானிஸ்தானில் 7 பேரும், பாகிஸ்தானில் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியது.

1988ம் ஆண்டில், உலக அளவில் போலியோ நோயை ஒழிப்பது குறித்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 99 விழுக்காடு குறைந்துள்ளது என்று, யுனிசெப் கூறியது.

தற்போது உலகில், ஏறக்குறைய ஒரு கோடியே அறுபது இலட்சம் பேர் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தடுப்பூசி நடவடிக்கைகளால் இந்நோய் பாதிப்பு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.