2017-10-12 16:06:00

நேர்காணல் – பாத்திமாவில் அன்னைமரி காட்சியின் 100ம் ஆண்டு


அக்.12,2017. போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில், லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா ஆகிய மூன்று சிறார்க்கு, அன்னைமரியா, கடைசி முறையாக காட்சியளித்ததன் 100ம் ஆண்டு, அக்டோபர் 13, இவ்வெள்ளியன்று நிறைவடைகின்றது. இந்த நூறாம் ஆண்டு, கடந்த ஓராண்டளவாக, பாத்திமாவிலும், உலகின் பல்வேறு திருத்தலங்களிலும் சிறப்பிக்கப்பட்டது. போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் ‘கடவுளின் மீட்புத் திட்டத்தில் பாத்திமா அன்னை’, என்ற தலைப்பில், கடந்த செப்டம்பர் 13 முதல் 17 வரை, பன்னாட்டு மரியியல் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதனை, போலந்து நாட்டின் Zakopane – Krzeptówki பாத்திமா திருத்தலம், போலந்து ஆயர் பேரவையின் திருத்தலங்கள் துறை, போலந்து மரியியல் கழகம் ஆகியவை இணைந்து, வத்திக்கான் பாப்பிறை உலகளாவிய மரியியல் கழகம், போலந்து ஆயர் பேரவை ஆகியவற்றின் உதவியுடன் நடத்தின. இம்மாநாட்டில் உரையாற்றியிருப்பவர், அ.பணி முனைவர் டென்னிஸ் குழந்தைசாமி. மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்த அ.பணி முனைவர் டென்னிஸ் அவர்கள், உரோம் பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் தலைவர்.








All the contents on this site are copyrighted ©.