2017-09-30 16:58:00

இந்தியாவில் 50% பெண்களுக்கு, இதயம் தொடர்புடைய நோய்கள்


செப்.30,2017. இந்தியாவில் ஏறத்தாழ ஐம்பது விழுக்காட்டுப் பெண்கள், இதயம் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாக, ஒரு புள்ளி விவரம் எச்சரித்துள்ளது.

செப்டம்பர் 29, இவ்வெள்ளியன்று, உலக இதய நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, இவ்விவரங்களை வெளியிட்டுள்ள ஊடகங்கள், 2014ம் ஆண்டுக்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 33 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின்படி, இந்தியாவில் ஏறத்தாழ ஐம்பது விழுக்காட்டுப் பெண்களுக்கு, கெட்ட கொழுப்பின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வட இந்தியாவில் வாழ்கின்ற பெண்களுள் 33.11 விழுக்காட்டினருக்கும், கிழக்கு இந்தியாவில் வாழ்கின்ற பெண்களுள் 35.67 விழுக்காட்டினருக்கும், இப்பாதிப்பு அதிகம் என்றும், தென் இந்தியாவில் வாழ்கின்ற பெண்களுள் 34.15 விழுக்காட்டினருக்கு, அதிகளவில் கெட்ட கொழுப்பின் பாதிப்பு இருக்கின்றது என்றும், அக்கெணக்கெடுப்பு கூறுகின்றது.

இந்தியாவில், பெண்கள் இறப்புக்கு முதல் காரணாக இருப்பது, இதயம் தொடர்பான நோய்கள் எனச் சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : IANS /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.