2017-09-29 14:45:00

இறை இருப்பை நினைவூட்டும் அதிதூதர்கள்


செப்.29,2017. இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட அதிதூதர்கள் திருவிழாவை மையமாக வைத்து தன் டுவிட்டர் செய்தியை இந்நாளில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'இன்று அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் இரஃபேலின் திருவிழா. இறைவனின் இருப்பை நாம் எப்போதும் நினைவில் கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்குடன் இந்த அதிதூதர்களை நோக்கி இறைஞ்சுவோம்' என திருத்தந்தையின் வெள்ளி தின டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

இதே நாளில், திருப்பீடத்திற்கான கானா நாட்டின் புதிய தூதுவர்  Joseph Kojo Akudibillah அவர்களிடமிருந்து, பணி நியமன நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று, அவர் நியமனத்தை அங்கீகரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.