2017-09-28 18:03:00

இயேசுவை சந்திப்பதால் நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்


செப்.,28,2017. இயேசுவை சந்திப்பதால் நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'இயேசுவை நேருக்கு நேர் சந்திக்கும் நிகழ்வு, நம் வாழ்வுக்கு சரியான பாதையை காட்டுவதுடன், வாழ்வை அர்த்தமுடையதாகவும் நிரப்புகின்றது' என தன் டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

மேலும், வியாழனன்று,  நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் நேரடிச் செயலராக, அமலமரி தியாகிகள் துறவு சபையின் அருள்பணி Ryszard Szmydki அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை.

இதே நாளில், திருப்பீட கத்தோலிக்க கல்விப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Giuseppe Versaldi, அதன் செயலர், பேராயர் Angelo Vincenzo Zani, மேலும், கர்தினால் Domenico Calcagno ஆகியோரையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.