2017-09-23 17:24:00

நம்பிக்கை மற்றும் நற்செயல்கள் வழி இறைநம்பிக்கையை பரப்புதல்


செப்.23,2017. இறைநம்பிக்கையின் ஒளியை எவ்வாறு பரப்புவது என்பது குறித்து இச்சனிக்கிழமையின் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருத்தல், மற்றும் நற்செயல்களை புரிதல் வழியாக, இறை நம்பிக்கையின் ஒளியை மக்களிடையே பரப்பமுடியும்' என்று, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகிறது.

மேலும், இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள இத்தாலிய தூதர் பியெத்ரோ செபஸ்தியானியிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று, அவரது பதவி நியமனத்தை ஏற்றுக்கொண்டார், திருத்தந்தை.

இதே நாளில், ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet, அவர்களையும், திருப்பீட கலாச்சார அவையின் முன்னாள் செயலர், ஆயர் Barthélemy Adoukonou அவர்களையும் தனித்தனியாக சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 

 
All the contents on this site are copyrighted ©.