2017-09-19 17:11:00

துயருறுவோரின் துன்பம் துடைப்பதே அமைதியை ஊக்குவிக்கும் செயல்


செப்.19,2017. ஏழைகள், புலம்பெயர்ந்தோர், மற்றும், அடிமைத்தொழிலுக்கு உள்ளாக்கப்பட்டோரின் துன்பங்களை துடைப்பதே அமைதியை ஊக்குவிப்பதற்குரிய வழி என இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'அமைதியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஏழைகள், புலம்பெயர்ந்தோர், மற்றும், நவீன அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்பட்டோருக்கு உதவும் நிலையான தீர்வுகளை கண்டுகொள்ள, ஒன்றிணைந்து செயல்படுவோம்' என்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

மேலும், இச்செவ்வாயன்று திருப்பீட செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், 1983ம் ஆண்டு எம்மானுவேலா ஒர்லாந்தி என்ற சிறுமி, இத்தாலியில் காணாமல் போனதற்கும், திருப்பீடத்திற்கும் தொடர்பு உள்ளது என இரு பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி பொய்யானது, மற்றும், திருப்பீடத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது என தெரிவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.