2017-09-18 16:53:00

இதயத்தை சுத்தமாக வைக்கும் சக்தி பெறுவோம்


செப்.18,2017. 'இறைவார்த்தையை பெறுவதற்கு தடையாக இருப்பனவற்றை அகற்றும் மனபலத்தைப் பெறுவோம்' என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்கள் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'இறைவார்த்தையை நெருக்கி நசுக்கும் பாறைகளையும் முட்புதர்களையும் அகற்றி, நம் இதயங்களை சுத்திகரிப்பதற்குத் தேவையான சக்தியைக் கண்டுகொள்வோம்' என்ற சொற்களுடன் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி வெளியானது.

மேலும், இஞ்ஞாயிறன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், 'நம் வாழ்வுகளின் மையத்தை இயேசு ஆக்ரமிக்கும்போது, நமக்குள்ளிருந்து நாம் வெளியே வர உதவி, நம்மை மற்றவர்களுக்கு அருகாமையில் கொணர்கிறார்'  என்ற சொற்கள் இடம்பெற்றன.

இதற்கிடையே, ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிகழும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த பொலிவியா நாட்டு ஆயர்களை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.